ஆடை விவகாரம் அமிதாப் உர்ர்ர் ‘கருத்து சொல்ல நான் பிரதமர் இல்லை’
ஜெர்மன் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். அப்போது கால் முட்டி வரையிலான குட்டை ஆடை அணிந்திருந்தார். இது இணைய தள வாசிகளால் சர்ச்சையாக்கப்பட்டது. இந்த விவகாரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. பிரியங்கா வுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் இந்தி நடிகர் வருண் தவான். ‘ஹாலிவுட் படங்களில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா இந்திய நடிகைகளின் மதிப்பை உயர்த்தி இருக்கிறார். உடை விஷயத்துக்காக அவரை தாக்கி கருத்துதெரிவிப்பது ஏற்க முடியாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பாடிய பாடல் ஒன்றை வெளியிடும் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பிரியங்கா உடை விவகாரம் குறித்து நிருபர்கள் கருத்துகேட்டபோது உர்ரானார். ‘நான் பிரதமரும் இல்லை, பிரியங்கா சோப்ராவும் இல்லை. நான் எப்படி இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியும்’ என்றார்.