ரகுல் லிப் டு லிப் முத்தம் : ஹீரோக்கள் அலறியடித்து ஓட்டம்
கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க ரகுல் தயாராக இருந்தாலும் அக்காட்சியில் அவருடன் நடிக்க ஹீரோக்கள் பயப்படுகிறார்களாம். லிப் டு லிப் காட்சியில் நடிப்பது குறித்து ரகுல் கூறும் போது, ’சினிமாவுக்கு கவர்ச்சி மிக முக்கியம். சினிமாவையும், கவர்ச்சியையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. ஹீரோயின்கள் கிளாமராக நடித்தால் அதை ரசிக்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். அதேபோல் லிப் டு லிப் காட்சியில் நடிப்பதிலும் தவறு இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.
கதைக்காக இல்லாமல் வெறும் விளம்பரத்துக்காக முத்தக்காட்சி அமைத்தால் அதை ஏற்க மாட்டேன்’ என்றார். லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க ரகுல் தயாராக இருந்தாலும் ஹீரோக்கள் அவருடன் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றதும் அலறியடித்து ஓடிவிடுகிறார்களாம். அதற்கு காரணம் ஏற்கனவே ஹீரோக்களுக்கு ரகுல் லிப் டு லிப் முத்தம் தந்து நடித்த 2 படங்கள் சரியாக ஓடவில்லை. அந்த எதிர்மறை சென்டிமென்ட்டை மனதில் வைத்தே ரகுலுடன் லிப் டு லிப் என்றதும் ஹீரோக்கள் நழுவிவிடுகிறார்களாம்.