மோசமான வானிலையால் தடுமாறிய விமானம் உயிர்தப்பினார் சன்னி லியோன்
மும்பை : பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் (36), அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் நண்பர்கள் நேற்று தனி விமானத்தில் பயணித்துள்ளனர். மோசமான வானிலையால் விமானம் கடுமையாக தடுமாறியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘மகாராஷ்டிராவில் உள்ளடங்கிய பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, மோசமான வானிலையால் விமானம் விபத்துக்கு உள்ளாக இருந்தது. விமானி சாமர்த்தியமாக எங்களை மீட்டு தரையிறக்கினார். அப்போது நாங்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு பயணித்தோம். நாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் விமானிகள்தான்’’ என்று கூறியுள்ளார்.