சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
லண்டன்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்துள்ளது.
இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 38 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 78 ரன்களை குவித்தார். கேப்டன் விராட் கோலி 76 ரன்களை எடுத்துள்ளார். வெற்றியை அடுத்து இம்மாதம் 15ம் தேதி அரையிறுதி போட்டியில் வங்க தேச அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது.