மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய்!
‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து மணிரத்னம் டைரக்டு செய்யும் புதிய படத்தை பற்றி இரண்டு விதமான தகவல்கள் பரவியுள்ளன.
அடுத்து அவர், ‘தளபதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும், தெலுங்கு கதாநாயகன் ராம்சரண் தேஜாவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்கப் போவதாகவும் 2 விதமான பேச்சு அடிபடுகிறது.
ஆனால், அவருடைய புதிய படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யாராய் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. இதற்காக, ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மணிரத்னம் டைரக்ஷனில், ‘இருவர்,’ ‘குரு,’ ‘ராவணன்’ ஆகிய மூன்று படங்களில் ஐஸ்வர்யாராய் ஏற்கனவே நடித்து இருக்கிறார். நான்காவது முறையாக அவர் மீண்டும் மணிரத்னம் டைரக்ஷனில் நடிக்கிறார்.