சோகத்தில் பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படமான ‘பே வாட்ச்’ நல்ல விமர்சனங்களை பெறவில்லை. பல ஊடகங்கள், படத்தை மோசமாக விமர்சித்துள்ளன.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து நடித்த ஹாலிவுட் படம் ‘பே வாட்ச்’. படம் உலகளவில் வெளியாகி இருந்தது. அரை குறை ஆடை, அதிக கவர்ச்சி என குடும்பத்தினரை நெளியவைக்கும் என்பதால் ‘இந்த படத்தை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டாம்’ என்று பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் சொன்னபடியே யாரும் சென்று பார்க்கவில்லை போல. பாவம்... இந்தியாவில் படம் தேறவில்லை. இங்கு மட்டுமல்ல, எந்த நாட்டிலும் படம் வெற்றி பெறவில்லை. உலக ஊடகங்கள் ‘பே வாட்ச்’ திரைப்படத்தை வசைபாடி வருகின்றன. ‘இதெல்லாம் ஒரு படமா? திறமைசாலிகள் இருந்தும் அவர்களை பயன்படுத்தவில்லை’ என விமர்சித்து வருகின்றன. கூடவே பிரியங்காவின் நடிப்பையும் வறுத்து எடுத்திருக் கிறார்கள். இதனால் முதல் ஹாலிவுட் படமே மண்ணை கவ்வியதை நினைத்து பிரியங்கா சோகத்தில் இருக்கிறார்.
ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், ‘பே வாட்ச்’ படம் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பது உறுதி’ என்று கூறி அதிரவைத்திருக்கிறார்.