நீச்சல் உடை சமந்தாவை வம்பிழுத்த ரசிகர் : வெளுத்து வாங்கிய நடிகை
சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப் பட்டிருக்கிறது. கோவாவில் திருமண வைபவம் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின் றனர். அதேசமயம் நடிப்பையும் தொடர உள்ளார் சமந்தா. அதை உறுதிபடுத்தும் வகையில் கவர்ச்சியாக நடிப்பதற்கு தடை இல்லை என்பதுபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் ஸ்டில் வெளியிட்டார். விரைவில் விடுமுறை கொண்டாட்டமாக டூர் புறப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நீச்சல் உடையில் சமந்தாவின் ஸ்டில்லை பார்த்த ரசிகர்கள் அவரை வம்பிழுத்தனர். ‘உங்கள் ரசிகர்களை அவமானப்படுத்தாதீர்கள். உங்களது அழகான தோற்றம்தான் எங்களுக்கு வேண்டும். இதுபோன்ற அவமானகர தோற்றமில்லை’ என்றும், ‘அகினேனி (நாகார்ஜூனா)குடும்பத்தினரின் பெயரை நீங்கள் பாழ்படுத்தாதீர்கள்’ என்று சிலரும் தாக்கி கருத்து தெரிவித்திருந்தனர்.
அதைக்கண்டு கோபம் அடைந்த சமந்தா பதிலடி தந்தார். ‘ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது குணத்தை வைத்து கணிப்பதற்கு பதில் அவர் அணியும் உடையை வைத்து கணிப்பவர் நீங்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. வரப்போகும் தலைமுறைகள் உங்களிடமிருந்தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களை கண்டும், உங்களது அறிவுபூர்வமற்ற சிந்தனையை கண்டும் வெட்கப்படுகிறேன்’ என வெளுத்திருக்கிறார் சமந்தா.