மதுரை ஐகோர்ட் தடை ஆச்சரியம் அளிக்கிறது: கேரள நீதிபதிகள் கருத்து



திருவனந்தபுரம்: இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாத்சிங் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்தியாவில் மாடுகளை வெட்டவோ விற்பனை செய்யவோ மத்திய அரசு தடை விதிக்கவில்லை. மத்திய அரசின் உத்தரவை சரியாக  புரிந்து  கொள்ளாமல் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்தது ஆச்சரியம் அளிக்கிறது. மத்திய அரசின் உத்தரவில் மனித உரிமை மீறலும் இல்லை. அதனால் இந்த வழக்கு செல்லுபடியாகாது என்று தெரிவித்தனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url