தயாரிப்பாளருடன் டாப்ஸி நெருக்கம்
இரண்டு ஹீரோயின்களை ஒரே படத்தில் நடிக்க வைத்தால் பல சமயங்களில் அவர்களுக்குள் மோதல் ஏற்படுவதுண்டு. பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்கா, தமன்னா இணைந்து நடித்திருந்தனர். பிரச்னை எதுவும் இல்லாமல் சுமூகமாக பணி முடிந்தது. அதேபடம் 2ம் பாகமாக வெளிவந்தபோது அனுஷ்கா பாத்திரத்துக்கு முக்கியத்துவம் தந்து தனது கதாபாத்திரம் பெரும்பகுதி குறைக்கப்பட்டுவிட்டதாக புகார் எழுப்பினார் தமன்னா.
இதனால் பட புரமோஷன் சிலவற்றில் பங்கேற்பதை தவிர்த்தார். இந்தியில் டாப்ஸி, ஜாகுலின் பெர்னான்டஸ் இணைந்து நடிக்கும் படம் ‘ஜுட்வா 2’. வருண் தவான் ஹீரோ. இப்படத்தை சாஜித் நடியதாவாலா தயாரிக்கிறார். இதில் தனது கதாபாத்திரம் குறைக்கப்பட்டு டாப்ஸிக்கு கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுப்பி உள்ளார் ஜாகுலின். இதனால் இரு நடிகைகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
‘தயாரிப்பாளர் சாஜித்துடன் டாப்ஸி அதிக நெருக்கம் காட்டுகிறார். அதனால்தான் அவருக்கு கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனக்கு காட்சிகள் குறைக்கப்பட்டிருக்கிறது’ என்று சர்ச்சை கிளப்பி இருக்கிறார் ஜாகுலின். இதற்கு பதில் அளித்துள்ள டாப்ஸி,’இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை’ என கூறினார்.