கவர்ச்சியை கண்டித்ததால் பொங்கிய தீபிகா : ரசிகர்கள் அதிர்ச்சி
சமீபத்தில் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடியை அந்நாட்டில் சந்தித்த நடிகை பிரியங்கா சோப்ரா குட்டை கவுனில் கவர்ச்சி உடை அணிந்திருந்தார். இதை பலரும் விமர்சித்திருந்தனர். இதில் கோபம் அடைந்த பிரியங்கா அன்று மாலையே தொடை பகுதி தெரியும் அளவுக்கு உடை அணிந்து விமர்சித்தவர்களின் வாயை அடைத்தார். அதேபோல் தற்போது தீபிகா படுகோன் வம்பில் சிக்கியிருக்கிறார். ஆங்கில மேக்ஸிம் இதழ் ஒன்றிற்கு நீச்சல் உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் அளித்திருந்தார் தீபிகா படுகோன். அதைப்பார்த்தவர்கள் அவரை இணைய தளபக்கத்தில் திட்டித் தீர்த்தனர்.
இதைவிட சிறிய உடை உங்களுக்கு கிடைக்கவில்லையா?, இந்த உடையை மட்டும் ஏன் அணிந்திருக்கிறீர்கள் அதையும் கழற்றி எறிய வேண்டியதுதானே?, ஹாலிவுட் படத்தில் நடிக்கச் சென்றபிறகு இந்தியாவுக்கு கெட்ட பெயர் உண்டாக்குகிறீர்கள் என சரமாரியாக தாக்கியிருந்தனர். அதைப்பார்த்து கோபம் அடைந்த தீபிகா, பிரியங்கா சோப்ரா பாணியில் மேலும் கவர்ச்சியாக உடை அணிந்து வித்தியாசமான கோணத்தில் தனது படத்தை வெளியிட்டிருக்கிறார். இது அவரை திட்டிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.