விமான நிலையத்தில் அடாவடியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி: இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் தடை விதிப்பு
ஆந்திரா: விமானப் பணியாளர்களிடம் தகராறு செய்த புகாரில் தெலுங்கு தேசம் எம்.பி. திவாகருக்கு பல்வேறு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விமானம் நிலையத்தில் இன்டிகோ விமானத்தில் ஏறி ஐதராபாத் செல்ல அவர் சென்றுள்ளார். அப்போது விமானம் புறப்பட தயாராக இருந்ததால் அவருக்கு போர்டிங் பாஸ் வழங்க விமான நிலைய ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் இன்டிகோ விமான டிக்கெட் கவுண்டருக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த மேஜை மற்றும் பிரிண்டரை அவர் சேதப்படுத்தியுள்ளார். தெலுங்கு தேசம் எம்.பி.யின் நடவடிக்கையை அடுத்து இன்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டனர். ஏற்கனவே சிவசேனா எம்பி விமானத்தில் ஊழியர்கள் தகராறு செய்தார் என்ற காரணத்தால் தடை விதிக்கப்பட்டார், பின்னர் தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.