காலா படத்தில் பாடும் மகாராஷ்டிரா முதலமைச்சரின் மனைவி?
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா-கரிகாலன். இந்த படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மே 28ம் தேதி மும்பையில் தொடங்கியது. இந்நிலையில் ரஜினி மும்பையில் இருந்த மகாராஷ்ரா முதலமைச்சர் தேவந்திர படநவிஸ் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார். இது குறித்து அம்ருதா தனது இணையதளத்தில் ரஜினியை சந்தித்ததாகவும், சமூகத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி பேசியதாக தெரிவித்துள்ளார்.
அம்ருதா நடனம், பாடுவது போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் பிர் சே என்ற ஆல்பத்தில் அமிதாபச்சனுடன் இணைந்து ஆடி பாடினார். இந்நிலையில் காலா படத்திலும் அவர் பாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் படக்குழு தெரிவிக்கவில்லை.