ஸ்பைடர் படத்தில் பொறுப்பான டாக்டராக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகஷே்பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படம் ஸ்பைடர். இதுவரை கிளாரமருக்காக பயன்படுத்தி வந்த ரகுல் ப்ரீத் சிங், இந்த படத்தில் பொறுப்பான டாக்டர் வேடம் ஏற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் நான் மொழிகளிலும் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுவை காதலிக்கும் பெண்ணாக நடித்தாலும், கதையை நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரம் ரகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.
எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.