மாம்பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள்....
நோஞ்சன் பிள்ளைகள் மாம்பழச் சாறால் மாம்பழக்கன்னம் பெறலாம்.
உஷ்ண நாடுகளில் விளைகிறது. உஷ்ணப்பழம். ருசியான, வாசனையான பழம். மஞ்சள் நிறம் கொண்டது. பலவகைப் பழங்கள் உற்பத்தியாகின்றன. 500 வகை மரங்கள் உள்ளன. அம்மா ஊட்டாததை மாம்பழம் ஊட்டும் என்பார்கள். நமது கன்னத்தை மாம்பழத்திற்கு ஒப்பிட்டு மாம்பழக்கன்னம் என உயர்வாகப் போற்றுகின்றனர்.
மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்:
நீர்=83%
மாவுப்பொருள்=15%
புரோட்டின்=0.6%
கொழுப்பு=0.4%
கால்சியம்=12 யூனிட்
தாது உப்புக்கள்=0.4%
இரும்புத் தாது=0.5 யூனிட்
நார்ச்சத்து=0.8%
வைட்டமின் C=30 யூனிட்
வைட்டமின் A=600 யூனிட்
வைட்டமின் B1=0.3 யூனிட்
வைட்டமின் B2=0.04 யூனிட்
நியாசின்=0.3 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
மனிதர்களுக்கு வைட்டமின் A தேவை தினசரி 5000 யூனிட்டுகள். மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது.
கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது.
வைட்டமின் C அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. நோஞ்சன் பிள்ளைகள் உடல் தெம்பும் எடையும் பெறுகின்றனர்.
இருதயம் வலிமை பெறும். பசி தூண்டும்.
உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும்.
புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது.