சரித்திர நாடகத்தில் நடித்து வரும் நீத்து சந்திரா
யாவரும் நலம், ஆதிபகவன், தீராத விளையாட்டு பிள்ளை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. இவர் தற்போது இந்தி, மற்றும் வட இந்திய மொழிகளில் நடித்து வருகிறார். இதனிடையே நாடகங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது உம்ராவோ ஜான் என்ற சரித்திர நாடகத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் சரித்திர நாடகங்களுக்கு எப்போதும் வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். நான் தற்போது தான் நாடகத்தில் நடிக்கவில்லை என்றும், தான் கல்லூரிகளில் படிக்கும் போதே நடித்து வருவதாக தெரிவித்தார். படத்தில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் நாடகத்தில் நடிப்பதை விட மாட்டேன் என்று நீத்து சந்திரா தெரிவித்தார்.