ஹலோ நீங்க கீர்த்தி தானா?
குடும்பபாங்கான நடிகை என்று அழைக்கப்பட்டு வரும் கீர்த்திக்கு அது பிளஸ் பாயின்ட்டாக அமைந்தது. இளம் ஹீரோக்கள், முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக தமிழ், தெலுங்கில் கைநிறைய படங்களுடன் நடித்து வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் சாவித்திரி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் அவரை இந்த வேடத்துக்காக உடல் எடையை அதிகரிக்கச் சொல்லி இயக்குனர் கூறி வரும் நிலையில் திடீரென்று மேலும் ஒல்லி தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.
ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்துக்காக போஸ் அளிப்பதற்காக அவர் பங்கேற்ற போட்டோ செஷனில் நவநாகரீக உடை அணிந்து இரு வகிடு எடுத்து தலைசீவி சாக்கெலட் நிற காஸ்டியூமில் ஜொலிக்கிறார். இது கீர்த்தி தானா என்று பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
குடும்பபாங்கான பாத்திரத்துக்கு மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாகவும் நவநாகரீக தோற்றத்துக்கு தயார் என்பதுபோல் அவரது போஸ் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். அவரது புதிய தோற்றத்தை பார்த்து, ‘ஹலோ நிஜமாகவே நீங்க கீர்த்திதானா? என்று ஒரு ரசிகர் சந்தேகம் மேலிட கேட்டிருக்கிறார்.