புதிய பி.எம்.டபுள்யூ மின்சார ஸ்கூட்டர்



எதிர்கால வாகன உலகிற்காக பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்தாண்டில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. சூப்பர் சார்ஜிடு ஆர்5, கான்சப்ட் 90 போன்ற பெயர்களில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் கடந்தாண்டு பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இதை பின்பற்றி, இந்தாண்டில் பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிடுகிறது.  இத்தாலியில் பழங்கால கார்களுக்கான கண்காட்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அப்போது பி.எம்.டபுள்யூ நிறுவனம் மோட்டார்ராட் கான்செப்டில் அது உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது.

டூயல் டோன் நிறங்களில் தோற்றம் கொண்ட இதில் சிராமிக் எல்.இ.சி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ‘’சி’’ எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சம் உள்ளது. தொடுதிரை வசதியுடன்கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது. டிஸ்பிளேவில் வண்டியின் வேகம், போகும் பாதை மற்றும் ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும். அட்டகாசமான தோற்றம், தொழில்நுட்பத்தில் தயாராக உள்ள பி.எம்.டபுள்யூ மோட்டார் ரெட் கான்செப்ட் ஸ்கூட்டரின் விற்பனை குறித்த விவரங்களை பி.எம்.டபுள்யூ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad