குளத்தை தூர்வாரும் எஸ்.பி.பி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகிலுள்ள கோனேட்டம் பேட்டை, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சொந்த ஊர். சமீபத்தில் அங்கு சென்று பழைய நினைவுகளில் மூழ்கிய அவர், உறவினர்கள் மற்றும் பால்யகால நண்பர்களைச் சந்தித்து மனம் நெகிழ்ந்தார். அங்குள்ள துலக்கானத்தம்மன் கோயில் குளத்தை தூர்வார நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார்.