நட்சத்திரங்களை விட வெப்பமான கிரகம் கண்டுபிடிப்பு




மேற்பரப்பில் தோராயமாக 4,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கொண்ட வித்தியாசமான உலகம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அது கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்றே வெப்பமானது.

பூமியில் இருந்து சுமார் 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் KELT-9b கிரகம் தனது நட்சத்திரத்தை சுற்றுகிறதுபடத்தின் காப்புரிமைNASA/JPL-CALTECH


பூமியில் இருந்து சுமார் 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் KELT-9b கிரகம் தனது நட்சத்திரத்தை சுற்றுகிறது
KELT-9b சுற்றிவரும் நட்சத்திரம் மிகவும் வெப்பமானதாக இருப்பது ஒரு பகுதிக் காரணம்தான்; இந்த வேற்றுலகம் அந்த நட்சத்திரத்திற்கு மிக அருகிலேயே இருப்பதும் தான் அதன் அதிவெப்பத்திற்கு காரணம்.

KELT-9b கிரகம், தனது நட்சத்திரத்தை சுற்றி வர வெறும் இரண்டே நாட்கள்தான் ஆகின்றன.
நட்சத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால், KELT-9b கிரகம் நீண்ட காலம் நீடித்திருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. அதன் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் கதிர்வீச்சுடன் வெடித்து, விண்வெளியில் கலக்கின்றன.

நட்சத்திரத்தை, துருவத்திலிருந்து துருவம் வரை சுற்றி வருவதால், வால்மீன் என்று இதனை ஓரளவுக்கு சொல்லலாம் என்பது இந்த கண்டுபிடிப்பின் மற்றொரு பிரத்யேக அம்சம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

KELT-9b குறித்த செய்தி, 'நேச்சர்' பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
திங்கட்கிழமையன்று டெக்சாஸில் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற அமெரிக்க வானியல் சங்கத்தின் கூட்டத்தில், இதன் தனித்துவமிக்க பண்புகள் பற்றிய தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

"2014 ஆம் ஆண்டிலேயே KELT-9b ஐ கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், உண்மையிலேயே இது வினோதமான, தனித்தன்மைமிக்க உலகம் என்றும், மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவருகிறது என்றையும் உறுதி செய்ய இத்தனை காலம் ஆனது," என்று ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்காட் கெளடி, பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த கிரகத்தின் பிரம்மாண்டம் மற்றும் மகத்துவம் பற்றி நாங்கள் நன்றாகவே தெரிந்துக் கொண்டோம். வியாழன் கிரகத்தை ஒப்பிடும்போது, அதை விட மூன்று மடங்கு எடையும், அளவில் இரண்டு மடங்கும் பெரியது; அதிவிரைவாக சுற்றுவதால், பார்ப்பதற்கு மிகவும் தட்டையாக இருப்பதுபோல் தோன்றும்.

'ஹாட் டின்னர்'

ஈர்ப்பு விசைப் பூட்டல் (gravitational locking) வகையில், இந்த கிரகம் தன்னுடைய நட்சத்திரத்துடன் இணைந்திருக்கிறது. எனவே, நம்முடைய சந்திரன், பூமியுடனான தனது தூரத்தை எப்போதுமே காட்டாமல் இருப்பதைப்போன்றே, KELT-9bயும் எப்போதும் ஒரேவிதமான தோற்றத்தை அளிக்கிறது.
இதனால், KELT-9b இன் "பகல் பக்க" வெப்பநிலை 4,300°செ என்பதைவிட அதிகரிக்கிறது. இது பால்வீதியில் இருக்கும் வழக்கமான செங்குறுமீன் (red dwarf star) நட்சத்திரங்களை விட அதிகமான வெப்பம் ஆகும்.

KELT-9 யின் நட்சத்திரம் வெளியிடும் புற ஊதா கதிர்கள், அந்த கிரகத்தின் வளிமண்டலத்தை அழித்துவிடலாம். நட்சத்திரமானது, கிரகத்தில் இருப்பவற்றை நொடி ஒன்றுக்கு 10 பில்லியன் அல்லது 10 டிரில்லியன் கிராம் என்ற அளவில் முற்றிலுமாக அழித்துவிடலாம் என பேராசிரியர் கெளடியின் ஆய்வுக் குழுவினர் கணித்துள்ளனர்.

KELT-9b பாறைகளாலான கோளமாக இருந்தால், அது இறுதியில், முற்றிலுமாக தகர்ந்து போகலாம்; ஆனால் இந்த கிரகம், இயற்கையாகவே தனது நட்சத்திரத்தால் கிரகிக்கப்படலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.

ஏ வகை நட்சத்திரங்கள்

இந்த நட்சத்திரம் 'ஏ' வகையைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை திறமையுடன் எரிகின்றன; குறைந்த வாழ்நாளை கொண்டவை. ஏ வகை நட்சத்திரங்கள் பல மில்லியன் ஆண்டுகள் மட்டுமே இருக்கக்கூடியவை, ஆனால் நமது சூரியன், பல பில்லியன் ஆண்டுகள் நிலைத்திருக்கக்கூடியது.
எனவே, KELT-9 இன் எரிபொருள் இருப்பு தீர்ந்து, கிரகத்தை விழுங்கும் வரைதான் இந்த கிரகம் நிலைத்திருக்கும்.
விஞ்ஞான உணர்கருவிகளுடன் இணைக்கப்பட்ட கேமரா டெலிஃபோட்டோ லென்ஸ்கள் கொண்ட, உயர்தர ரோபோ தொலைநோக்கி அமைப்பு முறையை பயன்படுத்தி மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் இந்த உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்த அமைப்பு முறையை வட அரைகோளம் மற்றும் தென் அரைகோளம் என இரண்டு இடங்களில் அமைத்திருக்கிறது. வாட்பர்பில்ட் பல்கலைக்கழகம், லெஹி பல்கலைக்கழகம் மற்றும் தென்னாபிரிக்க வானியல் ஆய்வுக்கூடத்துடன் கூட்டாக இணைந்து செயல்படுகிறது.
மிகச்சிறிய தொலைநோக்கியான கிலோடெக்ரியு என்ற பெயரால் இந்த வானியல் அமைப்பு செயல்படுகிறது. "எங்களை நாங்களே கேலி செய்து கொள்ளும் விதமாக, வேடிக்கையாகவே இந்த தொலைநோக்கிக்கு இப்படியொரு பெயரை சூட்டினோம், " என்று சொல்கிறார் பேராசிரியர் கெளடி.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad