படப்பிடிப்பில் செட் சரிந்து விழுந்து ஷாருக்கானுக்கு காயம்
இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் கத்ரீனா மேரி ஜான் படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷீட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷாருக்கான் தொடர்பான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென செட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் தொழில்நுட்ப கலைஞர்கள் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஷாருக்கானுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஷாருக்கானுக்கு ஒன்றும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரீனாமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.