தனுஷூக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வடசென்னை. இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் அமீர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக படத்தின் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் திட்டமிடல் இல்லாத காரணத்தால் பலமுறை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
முதலில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தம் செய்தனர். ஆனால் சமந்தா முதலில் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அமலபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் திடீரென அவரும் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து வடசென்னை படத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அந்த வேடத்திற்கு இயக்குனர் அமீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.