நூற்றாண்டு கதையில் லாரன்சுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்?
18 மற்றும் 19ம் நூற்றாண்டு சம்பவத்தில் நடக்கும் கதையைத் தேடிப்பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், ராகவா லாரன்ஸ். இது 2 பாகங்களாக உருவாகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலியின் உதவியாளர் மகாதேவ் இயக்குகிறார். ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். பாகுபலியின் சாயல் இல்லாமல் பிரமாண்டமாக உருவாக்கப்படும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.