ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த ஸ்ருதிஹாசன்
இந்த ஆண்டில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 படங்களும் தோல்வியை சந்தித்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெற்றி படங்களில் நடித்தார். 2017-ம் ஆண்டில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளில் தலா ஒரு படம் வெளியாகியுள்ளது. தமிழில் சிங்கம் 3, தெலுங்கில் கட்டமாரிடு இரண்டு படங்களும் பெரிய ஹிட் ஆகவில்லை.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இந்தியில் வெளியான பெஹன் ஹோகி டெரி முதல் நாளில் ரூ.40 லட்சம் வசூல் செய்தது. இதனால் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை சந்தித்தது. மேலும் தந்தை கமலுடன் நடிக்க உள்ள சாபாஷ் நாயுடு படமும் கிடப்பில் உள்ளது. சுந்தர் சி. இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் நடிக்க இருந்தார் ஸ்ருதிஹாசன். அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.