குழந்தைகள் அவசியம் வெயிலுடன் விளையாட வேண்டும்! ஏன்? எப்படி?
அவசரமாய் கிளம்பி, அள்ளி உண்டு என இன்றைய குழந்தைகள் செய்யும் செயலும், உணவுத் திட்டமும் பரபரதான். குழந்தைகளின் வளர்ச்சியில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
‘‘குழந்தைகள் உட்கொள்ளும் உணவின் மூலமாக கிடைக்கும் கால்சியம் சத்து, அவர்களுடைய 15 வயது வரை எலும்பு மஜ்ஜைகளில் சேமிக்கப்படுகிறது. அதற்கு பிறகு கிடைக்கும் கால்சியம் சத்துக்கள் எல்லாம் அதிகபட்சமாக எடுத்துக்கொள்ளப்பட்டு சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி ஒருவர் தினமும் 1000 மில்லி கிராம் அளவுக்கு கால்சியம் சத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு போதிய அளவு கால்சியம் சத்து உணவில் இருந்து மட்டும் கிடைப்பதில்லை. எனவே 15 வயது வரை கால்சியம் சத்து மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்தால் மட்டுமே உடம்பில் உள்ள கால்சியத்துக்கான பற்றாக்குறையச் சரி செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு பால், கீரை, முட்டை மற்றும் இறைச்சியில் இருந்து கால்சியம் சத்து அதிகமாகவே கிடைக்கும். இன்றைய துரித உணவுகளில் கால்சியம் சத்து சுத்தமாக இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்"
'' உணவு மட்டும் இன்றி சூரிய வெளிச்சத்தில் இருந்தும் கால்சியம் கிடைக்கிறது. முந்தைய காலங்களில் குழந்தைகள் அதிக நேரம் வெயிலில்தான் விளையாடினார்கள். தோல் பகுதியில் சூரிய ஒளி படும்போது அவை நேரடியாக உடலுக்கு செல்கிறது. முடிந்தளவு தினமும் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுங்கள். அதுவும் 12 மணி முதல் 3 மணி வரையிலான வெயில் நல்லது. வெயிலில் விளையாடும்போது அவசியம் தண்ணீர் குடிக்கவேண்டும்" .