இன்சூரன்ஸ் பாலிசி பிடிக்க நடிகை பயிற்சி
அகில், அனுகிருஷ்ணா நடிக்கும் படம் ‘அலைபேசி’. கதாபாத்திரத்துக்காக அனுவுக்கு பயிற்சி அளித்ததுபற்றி பட இயக்குனர் முரளிபாரதி கூறும்போது,’இன்சூரன்ஸ் பாலிசிக்காக அலையும் அனுவுக்கும், அகிலுக்கும் மோதல் ஏற்படுகிறது. பிறகு நட்பாகி காதலாகிறது. ஒரு கட்டத்தில் அதிகாரியாக உயர்கிறார் அனு. இந்நிலையில் அகிலை சந்திக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இருவரும் சந்திக்கிறார்களா என்பதற்கான விடையை கிளைமாக்ஸ் சொல்கிறது.
இன்சூரன்ஸ் பாலிசி பிடிக்க செல்போனில் எப்படி வாடிக்கையாளர்களிடம் பேசுவது என்று முதலில் அனு திணறினார். என்னிடம் பாலிசி கேட்டு செல்போனில் பலர் பேசியிருக்கி றார்கள். அந்த உரையாடலை மையமாக வைத்து அனுவுக்கு நானே பயிற்சி அளித்தேன். அதன்படி நடித்தார். மோகன் ஒளிப்பதிவு. எஸ்.ராமசந்திரன் தயாரிப்பு. சிங்கம்புலி, கானா பாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்ைன, கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.