சாம்பியன்ஸ் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்
கார்டிப்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 37.1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் முலம் பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.