செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் மீது சட்ட விசாரணை நடத்தக்கூடாது : ஐஜி காந்தாராவ் கடிதம்








ஹைதராபாத்:

ஆந்திர மாநில அரசுக்கு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப் படை ஐஜி காந்தாராவ் கடிதம் அனுப்பியுள்ளார்.இந்த கடிதத்தில் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் மீது சட்ட விசாரணை நடத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்  கடத்தல்காரர்களால் காவலர்கள் தாக்கப்படுவதை தடுக்க பதில் தாக்குதலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வனப்பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு ஆந்திர காவல்துறை சட்டப்பாதுகாப்பு தர  வேண்டும் என்றும் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால் காவலர்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செம்மரம் கடத்தியதாக திருப்பதி திருவண்ணாமலை, கிருஷ்ணாகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் அடிக்கடி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url