வீட்டிற்கு பிரேமம் என பெயர் வைத்த அனுபமா
மலையாளத்தில் ஹிட்டான பிரேமம் படத்தில் நடித்தவர், அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்திருந்த அவர், இப்போது தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார். தனக்கு பிரேமம் படம் டர்னிங் பாயின்ட்டாக அமைந்ததை நினைவுகூறும் வகையில், கேரளாவில் இரிஞ்சாலகுடாவில் கட்டியுள்ள புதிய வீட்டுக்கு, பிரேமம் ஹவுஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.
இதுபோல், சென்னை கே.கே நகரில் வசிக்கும் இயக்குனர் விக்ரமன், தனது முதல் படமான புதுவசந்தம் பெயரையும், அவரது எதிர்வீட்டில் வசிக்கும் தேவயானி ராஜகுமாரன், தனக்குத் திருப்புமுனையாக அமைந்த காதல் கோட்டை என்ற பெயரையும் தங்கள் வீடுகளுக்கு சூட்டியிருக்கின்றனர்.