நடிகையை மிரட்டிய பிக் ஹீரோ
இந்தியில் தனுஷ் ஜோடியாக ‘ராஞ்சனா’ படத்தில் நடித்தவர் சோனம் கபூர். சமீபத்தில் அவரது பிறந்த நாளையொட்டி இணைய தளபக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்தன. அதற்கு பதில் அனுப்பி வந்தார். திடீரென்று மிரட்டல் தொணியில் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. ‘என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் சோனம்... நான் அமிதாப்பச்சன். மைடியர்.. உனக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தேன் நீ பதில் அளிக்கவே இல்லை... உன் மீது கோபமாக இருக்கிறேன்’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமிதாப்பச்சனின் இந்த டுவிட்டர் மெசேஜுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் 1500 லைக்குகளும், 500 பதில் டுவிட்களும் வந்திருந்தன.
அதைக்கண்டு ஷாக் ஆன சோனம் உடனே பதில் அளித்தார். ‘ஓ மை காட்! சார் உங்கள் வாழ்த்து எனக்கு கிடைக்கவில்லை. நான் எப்போதும் எதற்கும் பதில் அளித்துவிடுவேன். நீங்கள் வாழ்த்தியதற்கு நன்றி. உங்கள் மகன் அபிஷேக்பச்சன் வாழ்த்துதான் எனக்கு கிடைத்தது. ஐயம் ஸோ ஸாரி’ என குறிப்பிட்டிருந்தார். இந்த உரையாடலை ரசித்த இணைய தள வாசிகள் தங்களது டுவிட்டர் மெசேஜுக்கும் சோனம் பதில் அளிக்கவில்லை என்று சந்தடி சாக்கில் கொளுத்தி போட்டனர்.