அக்டோபர் 9-ம் தேதி சமந்தாவுக்கு டும் டும்
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மகன், நடிகர் நாகசைதன்யா. அவரும், சமந்தாவும் தெலுங்கில் 3 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தபோது காதலித்தனர். இதையறிந்த இருவீட்டு பெற்றோர்களும் அவர்கள் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து சமந்தா, நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம், கடந்த ஜனவரி 29ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. இந்நிலையில் ஐதராபாத்திலுள்ள வீட்டில் அவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் பாணியில் வசித்து வருவதாக தகவல் வெளியானது.
இதை இருவரும் மறுக்கவில்லை. தற்போது சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் 5 படங்களில் நடித்து வருகிறார். வரும் அக்டோபர் 1 முதல் 10ம் தேதி வரை எந்தப் படத்துக்கும் அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. காரணம், அக்டோபர் 9ம் தேதி அவருக்கும், நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க சமந்தா முடிவு செய்துள்ளார்.