சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டி : வங்கதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
ஓவல்: மினி உலகக்கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது
பின்னா் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 47.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 308 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட் அதிகபட்சமாக 133 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 95 ரன்களும், அந்த அணியின் கேப்டன் இயான் மார்கன் 75 ரன்களும் எடுத்தனா்