விஜய் பிறந்த நாளில் விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக்
தெறிக்குப் பிறகு விஜய், அட்லி இணைந்துள்ள விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக், வரும் 22ம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியிடப்படுகிறது. ஐரோப்பா மற்றும் போலந்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, இந்த வாரம் சென்னையில் தொடங்குகிறது. தீபாவளிக்கு படம் ரிலீசாகிறது.