ஒரே நேரத்தில் 4 படத்தில் நடிக்கும் அருந்ததி நாயர்
சைத்தான் படம் மூலம் அறிமுகமானவர் அருந்ததி நாயர். இவர் கேரளத்தை சேர்ந்தவர். சைத்தான் படத்தை அடுத்து வேறு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் ஒரே நேரத்தில் நான்கு படத்தில் நடித்து வருகிறார். அஜ்மலுடன் ஜுலை 16 படத்தில் நடிக்கிறார். இது ஹாரர் படமாக உருவாகி வருகிறது. மேலும் யாவரும் வல்லவரே என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் 100 டிகிரி, மற்றும் மலையாளரத்தில் ஜூடு ஆண்டனியுடன் அனுராகம் என்ற படத்திலும் நடித்து வருவதாக தெரிவித்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்வதில் கவனமாக உள்ளதாக தெரிவித்த அருந்ததி நாயர், கவர்ச்சி வேடங்களை தவிர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது நடித்து வரும் படங்களால் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவேன் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.