குடிக்க தண்ணீர் இல்லாததால் 44 பேர் பலி: சகராவில் சோகம்




லிபியா: சகாரா பாலைவனத்தில் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் 44 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு இருந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். இதனிடையே கானாவில் இருந்து 50 பேர் லிபியாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். சகாரா பாலைவனத்தின் வழியாக வாகனத்தின் மூலம் லிபியா  சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகனம் பழுது ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் பாலைவனத்தில் சிக்கித் தவித்தனர். மேலும் அவர்கள் கொண்டுச் சென்ற தண்ணீர் காலியானதால் பெரும் தவிப்புக்குள்ளாயினர். இதனையடுத்து தண்ணீரின்றி ஒவ்வொருவராக உயிரிழந்துள்ளனர். இருப்பினும் சிலர் வேகவேகமாக நடந்து தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றை அடைந்தனர். அவர்கள் சொன்னதை அடுத்து செஞ்சிலுவை சங்கத்தினர் அங்கு சென்று உடல்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url