தீவிரவாதிகளுக்கு உதவுவதாக கூறி கத்தாருடனான உறவை சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட 4 நாடுகள் துண்டித்தது
ரியாத்:
தீவிரவாதிகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டி சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட 4 நாடுகள் கத்தாருடனான ராஜ உறவுகளை துண்டித்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு மேற்கு ஆசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி கத்தாருடனான உறவை சவுதி அரேபியா முறித்துக்கொண்டுள்ளதாக சவூதி அரேபியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதே காரணத்தால் உறவை துண்டித்துக்கொண்டுள்ளதாக பஹ்ரைன், தங்களது உள்நாட்டு விவரங்களில் கத்தார் தலையீடுவதாக குற்றம்சாட்டியுள்ளது. கத்தார் தூதர அதிகாரிகள் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்த நாடு கேட்டுக்கொண்டுள்ளது. பஹ்ரைனில் உள்ள கத்தார் நாட்டவர் 2 வாரத்திற்குள் திரும்பிச்சென்றுவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் இதே காரணத்தை கூறி உறவை துண்டித்துள்ளன. கத்தாரில் ராஜ உறவுகள் துண்டிக்கப்பட்டதுடன் ஏமன் கிளர்ச்சியாளர்களை அடக்கும் கூட்டு படையில் இருந்தும் கத்தார் நீக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய நாடுகளுடன் போக்குவரத்துக்கு துண்டிக்கப்படுவதால், கத்தார் தனிமைப்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.