ஐசிசி ஒருநாள் தரவரிசை கோஹ்லி மீண்டும் நம்பர் 1
துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்றின் முடிவில் வெளியாகி உள்ள தரவரிசை பட்டியலில், கோஹ்லி 862 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த தொடர் தொடங்கும் முன் நம்பர் 1 வீரர் டி வில்லியர்ஸ், 2வது இடத்தில் இருந்த வார்னர் இருவரும் கோஹ்லியை விட முறையே 22, 19 புள்ளிகள் முன்னிலை வகித்தனர்.
தற்போதைய பட்டியலில் வார்னர் (861) 2வது இடத்திலும், டி வில்லியர்ஸ் (847) 3வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஷிகர் தவான் (746) 10வது இடத்தை பிடித்துள்ளார். லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 68, 125, 78 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. பவுலர்களுக்கான டாப் 10ல் ஒரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை. அக்ஷர் பட்டேல் (13), அமித் மிஷ்ரா (15), அஷ்வின் 20வது இடத்தில் உள்ளனர்.