சச்சின்... சச்சின்... 'சச்சின் ஆந்தம்' வீடியோ இதோ..!
சச்சின் பயோபிக் படத்துக்கு, 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' எனப் பெயர் வைத்துள்ளனர். இதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ஏற்கெனவே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்,தெலுங்கு, இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வரும் 26-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.
Sachin Anthem
இந்த நிலையில், படத்தில் சச்சின் ஆந்தமை, சச்சின் மற்றும் ஏர்.ஆர். ரஹ்மான் இணைந்து வெளியிட்டுள்ளனர். மைதானத்தில் சச்சின்... சச்சின்... என்று எதிரொலித்த குரல்கள், சச்சினின் பெஸ்ட் இன்னிங்ஸ்களின் தொகுப்பு, மைதானத்துக்கு வெளியே சச்சினின் செயல்கள் என அனைத்தையும் இணைத்து, சச்சின் ஆந்தமை வெளியிட்டுள்ளனர்.