மருத்துவ செலவைக் குறைக்கும் ஆவாரம் பூ டீ - செய்முறை


நம்முடைய ஒரு நாளில் டீ குடிப்பதைத் தவிர்க்கவே முடியாது. இந்தப் பழக்கத்தை ஆரோக்யத்துக்கான விஷயமாக மாற்றினால் என்ன? மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை பரவலாக எல்லோருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது. பெண்களுக்கான உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இவைக்கு நமது உணவுப்பழக்கமும் முக்கியக் காரணம். மாத்திரைகளுக்கு அதிகமாக செலவு செய்து பக்க விளைவுகளை விலைக்கு வாங்குவதை விட, உணவே மருந்து என நாம் மாறிவிடலாம்.தினமும் ஒரு மூலிகை பானம்கூட அருந்தலாம். அவ்விதமான ஒரு மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த வித்யா.

                                                                               
ஆவாரம்பூ டீ

தேவையானவை:


ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி- சிறிய துண்டு ஒன்று
பால் - ஒரு டம்ளர்
கருப்பட்டி - சிறிய துண்டு
மிளகு  அரை டீஸ்பூன்
தண்ணீர்  ஒரு கப்
ஏலக்காய் - 2

செய்முறை :


ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி அத்துடன் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும். நிறம் மாறியதும், பால் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி குடிக்கவும். பாலைத் தவிர்த்துவிட்டும் குடிக்கலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url