நிலவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுலா செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு: விண்வெளி ஓடத்தில் நிலாவில் உலா வர திட்டம்





கலிபோர்னியா: விண்வெளி ஆய்வில் தொடர்பில்லாத சாதாரண சுற்றுலா பயணிகளை நிலவுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகானம் ஹாதோர்ன் நகரில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி சுற்றுலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலவுக்கு சுற்றுலா செல்ல 2 பேரை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அவர்கள் யார் அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை தெரிவிக்கப்படாதது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசாவின் வழிகாட்டுதலுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திலிருந்து சுற்றுலா ராக்கெட் ஏவப்பட்டு விண்வெளியை அடையும். பின்னர் அதிலிருந்து பிரிந்து நிலவுக்கு செல்லும் விண்வெளி ஓடத்தில் இருந்தபடியே சுற்றி பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் உள்ள நிலவு சுற்றுலா திட்டம் அடுத்த ஆண்டின் இறுதியில் தான் செயல்படுத்தப்படும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url