ஓவர் கவர்ச்சி; நடிகைக்கு தடை விதித்த அரசு
நடிகை டென்னி க்வான் அளவுக்கு மீறி கவர்ச்சியாக காட்டுவதாக கூறி கம்போடியா அரசு நடிகைக்கு படத்தில் நடிக்க ஓராண்டு தடை விதித்துள்ளது.
கம்போடியாவைச் சேர்ந்த நடிகை டென்னி க்வான்(24) அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இந்நிலையில் கம்போடியா அரசு அவருக்கு அதிர்ச்சி அளிக்கு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது,
டென்னி க்வான் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டுவதாக கூறி அந்நாட்டு கலாச்சாரத் துறை அவருக்கு ஓராண்டு காலம் தடை விதித்துள்ளது. இதனால் அவர் அவர் ஓராண்டு காலம் படங்களில் நடிக்க இயலாது. மேலும் கலாச்சாரத் துறை அவரை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளது.
அவரின் உடை ஆபாசமாக இருப்பதாகவும், அது கம்போடியா நாட்டு கலாச்சாரத்துக்கு ஒத்துவராது எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து டென்னி க்வான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனக்கு படங்களில் தடை விதிக்கப்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
நான் ஒன்றும் படங்களில் ஆபாசமாக நடிக்கவில்லை. பிற நடிகைகளை போல் உணர்ச்சிகளை தூண்டும்படி அளவுக்கு மீறிய கவர்ச்சியும் காட்டவில்லை. ஆனால் எனக்கு தடை விதித்துள்ளனர், என குறிப்பிட்டுள்ளார்.