சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து தெலுங்கில் ரெஜினா, சந்தீப் கிஷன் நடிக்கும் ‘நட்சத்திரம்’ புதிய படத்தில் குத்தாட்டம் போட சன்னியிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாக கூறப்பட்டது. கிருஷ்ண வம்சி இயக்குகிறார். இப்படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று படம் டிராப் ஆனதாக கிசுகிசு பரவியது. அதை மறுத்த பட தரப்பினர் விரைவில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறி உள்ளனர்.
தற்போதைய டிரெண்டிற்கு ஏற்ப இளைஞர்களை கவரும் கவர்ச்சி குத்தாட்டம் ஒன்றை படத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் சன்னி லியோன் ஆடுவார் என்று கூறப்பட்டதை பட தரப்பினர் உறுதி செய்யவில்லை. சம்பள விவகாரம் சிக்கல் ஏற்படுத்தியதாக தெரிகிறது.
சன்னிலியோன் ஆடவுள்ளதாக கூறப்பட்ட கவர்ச்சி ஆட்ட வாய்ப்பு தற்போது நடிகை ஸ்ரேயாவுக்கு செல்கிறது. ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதுபற்றி முதலில் தயக்கம் காட்டினார் ஸ்ரேயா. படத்தில் அப்பாடல் கதைக்கு முக்கிய தேவை என்பதை இயக்குனர் எடுத்துக் கூறியதையடுத்து ஒப்புக்கொண்டார். விரைவில் அதற்கான படப்பிடிப்பு நடக்க உள்ளது.