எப்படி உடையணிய வேண்டும் என்பது என் இஷ்டம்
இசைநிகழ்ச்சி ஒன்றுக்கு பாடகி ஸ்ரேயா கோஷல் ஆபாசமாக உடையணிந்து வந்ததாக சர்ச்சை எழுந்திருக்கிறது. நான் எப்படி உடையணிய வேண்டும் என்பது என் இஷ்டம் என்று ஆவேசப்படுகிறார் ஸ்ரேயா.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு படத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார். தான் தயாரிக்கும் பேய்ப்படத்தில் நடிக்க அவரிடம் விக்ரம் பட் கேட்டபோது, வேண்டுமென்றே மூன்று கோடி என்று மூன்று விரலைக் காட்டினாராம். விக்ரம் பட் படமென்றால் விவகாரம் என்பதால், அவரைத் தவிர்ப்பதற்காகவே இப்படி ஜாக்குலின் செய்ததாகச் சொல்கிறார்கள்.
ஒரு கேரக்டருக்காக உடல் எடையை அதிகரிக்கக் கேட்டபோது, நிர்த்தாட்சண்யமாக நோ சொல்லிவிட்டார் கேத்ரினா கைஃப். என் அழகே ஸ்லிம்மான உடல்தான். குண்டாகிவிட்டால் ரசிகர்களுக்கு பெப் போய்விடும் என்கிறார்.
சமீபத்தில் சல்மான்கான் கொடுத்த பார்ட்டியில் ஊர்வசி ரவுட்டேலா ஓவர் மப்பாகி மட்டையாகி விட்டாராம். அவரை பத்திரமாகத் தன் வீட்டில் தங்கவைத்து, மறுநாள் போதை தெளிவித்து பொறுப்பாக அனுப்பி வைத்திருக்கிறார் சல்மான்.