அனுஷ்கா மப்பு! விராட்கோலி கடுப்பு!
* ‘என்.எச்-10’ ஹிட்டுக்குப் பிறகு அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்த ‘பிஹ்ல்லவுரி’ சமீபத்தில் வெளியாகி தோல்வியடைந்து விட்டது. இந்த தோல்வியை தாங்க முடியாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக எந்நேரமும் நைட்கிளப்பிலேயே அனுஷ்கா மப்பில் மூழ்கிக் கிடந்தாராம். இதைக்கண்டு அவரது காதலர் விராட்கோலியின் குடும்பம் செம அப்செட்டாம்.
* தான் நடித்த படம் ஃப்ளாப் ஆகிவிட்டால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறாராம் டாப்ஸி. தன்னுடைய முதல் படத்திலிருந்தே இந்த பிரச்சினை அவருக்கு இருக்கிறதாம்.
* வித்யாபாலன் பாலியல் தொழில் நடத்தும் பெண்ணாக நடித்திருக்கும் ‘பேகம் ஜான்’ படத்துக்கு பன்னிரெண்டு இடங்களில் சென்ஸார் கட்.
* சல்மான், ஷாருக், அமீர் என்று மூன்று கான்களில் யாருடன் நடிக்க விருப்பம் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் டைரக்டர் கரண்ஜோஹர், கங்கனா ரணாவத்திடம் கேட்டார். மூன்று பேருடனும் நடிக்க விருப்பமில்லை என்று கங்கனா அதிரடியாக பதிலளிக்க, மூன்று கான்களுமே செம கடுப்பில் இருக்கிறார்களாம்.