எதிர்பாராத டிரம்ப்பின் நடவடிக்கையால் ஆட்டம் கண்ட வெள்ளை மாளிகை!

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் (FBI Director) ஜேம்ஸ் கோமியை  பதவி நீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.



அமெரிக்காவின் வெளியுறவு செயலராக  ஹிலாரி கிளின்டன் பணியாற்றிய போது, அரசு பணிகளுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதாக ஹிலாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணைக்கு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி தலைமை தாங்கினார். இந்த விசாரணை தொடர்பான ஆவணங்களை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்பித்தார் ஜேம்ஸ். அவர் சமர்பித்த ஆவணங்களில் தவறான தகவல்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் ஜேம்ஸ் கோமி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் டிரம்ப். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’புலனாய்வு பணிகளை ஜேம்ஸ் கோமியால் திறம்பட தலைமையேற்க முடியவில்லை. இது குறித்து அமெரிக்க அரசு முதன்மை வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொண்டு ஜேம்ஸை பதவி நீக்கம் செய்கிறேன். இனி அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு புதிய அதிகாரி தலைமை தாங்குவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.  டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, அமெரிக்கர்கள் பெரும்பாலானோருக்கு ஜேம்ஸ் வேலைநீக்கம் செய்யப்பட்டதில் விருப்பமில்லை என்பதால் டிரம்புக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.

இதற்கிடையே, ஹிலரி கிளிண்டன் இமெயில் விசாரணையால் ஜேம்ஸ் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று ஒரு தரப்பினர் மறுத்து வருகின்றனர். பின்பு எதற்காக இந்த பதவி நீக்கம். அவர்கள் கூறும் காரணம் அதிரவைத்துள்ளது. "அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் பங்கீடு இருப்பதாகவும், ரஷ்யா உதவியுடன் தான் டிரம்ப் வெற்றி பெற்றார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஜேம்ஸ் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்ததால்தான் டிரம்ப் ஜேம்ஸை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டிரம்ப்பின் மோசடி வேலைகள் வெளியே அம்பலம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகதான் இந்த பதவி நீக்கம்'' என்கிறது இந்த தரப்பு.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url