பிரபுதேவாவுடன் ஹன்சிகா ஜோடி : சண்டை முடிந்து சமாதானம்
சமீபகாலமாக பிரேக் அப் செய்துகொண்ட ஜோடிகள் இணைந்து நடிப்பது பாலிவுட், கோலிவுட்டில் புது டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. சிம்பு, நயன்தாரா, பிரேக் அப் செய்து கொண்டபிறகு ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்தனர். அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் காதல் கிசுகிசுவில் சிக்கியது பிரபுதேவா, ஹன்சிகா ஜோடி. பிரபுதேவா இயக்கிய எங்கேயும் எப்போதும் படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். அப்போது முதல் இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்ததாகவும் பிறகு அது சண்டையில் முடிந்தது என்றும் தகவல் பரவியது.
கடந்த ஆண்டு தனது படமொன்றில் நடிக்க ஹன்சிகாவிடம்
பிரபுதேவா கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். அதன்பிறகு பல்வேறு சமாதான தூதர்கள் படையெடுப்பில் மனம் மாறினார். இதையடுத்து சண்டை முடிந்து சமாதானம் ஆகிவிட்டார்களாம். பிரபுதேவா தயாரித்த போகன் படத்தில் ஹன்சிகா நடித்தார்.
தற்போது பிரபுதேவா ஜோடியாக குலேபகாவலி படத்தில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார் ஹன்சிகா. இப்படத்தை கரண் இயக்குகிறார். சமீபத்தில் ஹன்சிகா தனது இணைய தள பக்கத்தில் பட குழுவினர் பலரும் பின்பக்கம் திரும்பி நிற்பதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு ஜோடி பிரபுதேவாவுடன் ஹன்சிகா நிற்கும் தோற்றமாம்.