கவர்ச்சி காட்ட ரசிகர்களை வெயிட்டிங்கில் வைத்திருக்கும் நிகிஷா - லாவண்யா
என்னமோ ஏதோ, தலைவன், கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிகிஷா பட்டேல். தெலுங்கிலும் நடித்து வருகிறார். பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் அறிமுகமானபோது இவர் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. படம் வெற்றி பெறாததால் ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்தடுத்து வந்த படங்களும் கைகொடுக்காததால் தமிழில் புதுமுக நடிகருடன் என்ட்ரியானார். அந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய ஹீரோக்களின் கவனமும் அவருக்கு கிடைக்கவில்லை. தோல்வி படங்களால் நிகிஷா சோகத்தில் ஆழ்ந்தார். உடல் எடையும் திடீரென அதிகரிக்கக் தொடங்கியது.
வந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு படங்களும் தடைபட்டன. உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறாவிட்டால் மூட்டைகட்டி அனுப்பிவிடுவார்கள் என்று ஒரு சிலர் அவருக்கு எச்சரிக்கை மணி அடித்தனர். அதை புரிந்துகொண்டு உடனடி ஆக்ஷனில் இறங்கினார். ஓரளவுக்கு எடை குறைத்ததால், குண்டுர் டாக்கிஸ் 2ம் பாகம் தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இன்னமும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பட தரப்பு கண்டிஷன்போட்டதால் கடும் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் உடற்தோற்றத்தை வெளிக்காட்டும் வண்ணம் நீச்சல் உடை பாணியில் ஒரு காஸ்டியூம் அணிந்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அது வரவேற்பு பெறாவிட்டாலும் முன்பைவிட இப்போது ஓ கே என்றளவுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி உள்ளனர். இதனால் மேலும் உடல் எடையை குறைக்க வேகமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
நிகிஷாவை போலவே திரையுலகில் இடம்பிடிக்க போராடிக்கொண்டிருப்பவர் லாவண்யா திரிபாதி. பிரம்மன், மாயவன் படங்களில் நடித்த இவருக்கும் நிகிஷாவை போலவே எதிர் மறையான கமென்ட்ஸ் வந்துக்கொண்டிருந்தது. ஒரு வழியாக தனது உடல் எடையை குறைத்ததுடன் சேலை கட்டும் கதாபாத்திரங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு கவர்ச்சிக்கு தயாராகிவிட்டார். சீக்கிரமே டூ பீஸ் நீச்சல் உடை தோற்றத்தில் தனது கிக் தோற்றத்தை ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருப்பதாக அதிரடி அறிவித்திருக்கிறார்.