அஜீத் ஹீரோயின் டாப்லெஸ் அதிரடி
அஜீத் ஜோடியாக ‘பில்லா 2’ படத்தில் நடித்தவர் புருனா.
பிரேசிலை சேர்ந்த இவர் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் நடிக்கவாவது இவருக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். இந்த ஆண்டு யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. கைவசம் ஒரு படம் கூட இல்லாத நிலையில் டல் மூடுடன் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். சும்மா இருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நட்புவட்டாரம் உசுப்பிவிட உடனே அதிரடிக்கு தயாரானார் புருனா. இருக்கவே இருக்கிறது இணைய தள டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்கள். அதில் விளையாட்டை தொடங்க முடிவு செய்தார்.
டாப்லெஸ் புகைப்படம் எடுத்து அதை இணைய தள பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் புருனா. அத்துடன் சும்மா விட்டாரா? கூடவே 90களில் வெளியான பிரபல பாடல் ஒன்றின் வரிகளான, ‘நான் ஒரு பெண் நாய், நான் ஒரு காதலி, நான் ஒரு தாய், நான் ஒரு பாவி, நான் ஒரு துறவி’ என்ற வரிகளையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாவிட்டாலும் நெட்டிஸன்கள் மத்தியில் அவரது அதிரடி வைரலாகி இருக்கிறது.