சிரிய போர் நிறுத்தம்: ட்ரம்ப் - புதின் உரையாடல்
சிரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ட்ரம்ப் மற்றும் புதின் இடையே ஆரோக்கியமான உரையாடல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் நடத்திய தொலைபேசி உரையாடலில் சிரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆரோக்கியமான முறையில் உரையாடல் நடத்தப்பட்டது. சிரியாவில் நீண்ட காலம் நிலவும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு தலைவர்களும் விரும்புகின்றனர். இருவரது உரையாடலிலும் பாதுகாப்பு, அமைதி உட்பட பல முக்கியமான தலைப்புகள் இடப்பெற்றிருந்தன.
மேலும் கொரிய தீபகற்ப பகுதிகளில் நிலவும் பதற்றத்தைப் போக்குவது குறித்து ஆலோசித்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக நியமிக்கப்பட்டதற்கு பிறகு ட்ரம்ப் - புதின் இடையே நடைபெற்ற மூன்றாவது உரையாடல் இதுவாகும்.