அசைவ உணவுடன் எதைச் சாப்பிடலாம்... எவற்றைத் தவிர்க்கலாம்?




புலால், அசைவம்... பழந்தமிழர்களின் விருந்தோம்பலில் முக்கிய இடம்பிடிக்கும். இன்றைக்கும்கூட விருந்து என்றால் அது ஊரைக்கூட்டும் அசைவ உணவாகவே இருக்கிறது. வாய்க்கு ருசியாக உண்ணும் அசைவ உணவுடன் சுவைக்காக ஏதேதோ உணவுகளைச் சேர்த்து உண்பது இன்றைக்கு வழக்கமாகி விட்டது. அசைவ உணவுடன் எதைச் சேர்த்துச் சாப்பிடலாம்? எதைச் சேர்க்கக்கூடாது? என்ற ஒரு நியதி உள்ளது.

அசைவ உணவு

பொதுவாகவே அசைவ உணவுகள் செரிமானமாக நேரம் ஆகும். ஆகவே, இறைச்சியோடு சேர்த்துச் சாப்பிடும் உணவுகள் இறைச்சிக்கு எதிர்மறையான உணவாக இருக்க வேண்டும். எளிதில் செரிமானமாகாத உணவுடன் சேர்த்துச் சாப்பிடக்கூடிய உணவுகள் கடினமான  டாக்டர் பாலமுருகன்உணவை எளிதாக ஜீரணிக்கும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும்.

தேன்

1. தேன் vs இறைச்சி: சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை ஆயுர்வேதத்தில் 'ஆம விஷம்' என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கிழங்குகள்

2. முள்ளங்கி vs இறைச்சி: வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.

 3. கிழங்கு வகைகள் vs இறைச்சி: பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம். கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும்.

பயறு

4. மைதா உணவுகள் vs அசைவ உணவு: பொதுவாகவே மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னையை அதிகப்படுத்தும்.

5. உளுந்து vs இறைச்சி: கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.


6. பயறு vs இறைச்சி: முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.
தானியங்கள்

7. தானியங்கள் vs அசைவ உணவு: தானியங்களோடு சேர்த்துச் சாப்பிடுவதால், நம் உடலின் தேவைக்கும் அதிகமான எனர்ஜி கிடைக்கும். இதனால் வெயிலில் செல்ல முடியாமல் போவதோடு காலையில் எழுந்திருக்கவும் முடியாது. இதனால் யூரிக் ஆசிட் அதிகரிப்பதால் சிறுநீரகக் கல் வருவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

8. கீரை vs இறைச்சி: இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

9. தயிர் vs அசைவ உணவு: அசைவ உணவுடன் தயிர் சேர்க்கக்கூடாது. மேலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி சேர்த்துச் சாப்பிடுவதால் உருவாகும் ரத்தம் சுத்தமாக இருக்காது. அது தோல் நோய்கள் பலவற்றுக்கு வழிவகுக்கும்.
(குறிப்பு: கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவே கூடாது.)

எண்ணெய்

10. எண்ணெய் vs இறைச்சி: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை இறைச்சி சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. மேலும், இவை பருவகால மாற்றங்களைப் பொறுத்து மாறும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயால் சமைக்கப்படும் இறைச்சி செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

11. குளிர்பானங்கள் vs அசைவ உணவு: அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும்.

 எதனுடன் சேர்த்து சாப்பிடலாம்...

* இறைச்சியை நல்ல எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.

* இறைச்சியை பப்பாளிக்காயுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இறைச்சியை மிருதுவாக மாற்றும் தன்மை பப்பாளிக்கு உண்டு.

* அசைவ உணவுக்குப் பின் எலுமிச்சைப் பழச்சாறு அருந்தலாம். செரிமானத்துக்கு உதவும்.

எலுமிச்சைச் சாறு

* அசைவ உணவு உண்பதற்கு முன்னரோ பின்னரோ அஷ்ட சூரணம் சாப்பிடலாம். இது இறைச்சி எளிதில் செரிமானமாக உதவும்.

* அசைவ உணவுக்குப் பின் பெருஞ்சீரகம் அல்லது பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம். உணவை செரிமானமாக்குவதில் மிகச் சிறந்த பணியாற்றக்கூடியது. கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கும் சக்தி பெருஞ்சீரகத்துக்கு உண்டு.

* இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டதும், சுடுதண்ணீர் குடிக்கலாம். இது ரத்தக் குழாயை சுத்தம் செய்து சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது.

*  பால் சேர்க்காத சுக்கு மல்லி காபி அருந்தலாம். இது வயிற்று உபாதைகளில் இருந்து நம்மைக் காக்கும்

இறைச்சி.

* இறைச்சியுடன் வெறும் வெங்காயம் சேர்த்துச் சாப்பிடலாம். தயிரோடு கலந்து ராய்தா போல் சாப்பிடக்கூடாது. வெங்காயம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

* இறைச்சி உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளப்படும் இஞ்சி மற்றும் இந்துப்பு, நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதோடு, செரிமானத்தன்மையை அதிகரிக்கும். நச்சுத்தன்மையைக் குறைக்கும்.

இறைச்சியின் பலன்கள்:

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக கிடைக்க உதவும். மனித உடலின் எலும்பு மற்றும் தசைகள் வலுப்பெற இவை உதவும்.

யாருக்கு... எப்போது... இறைச்சி கூடாது..!

* அனைவருமே இரவு வேளைகளில் இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும்.

* இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இறைச்சியை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

* முதல் நாள் செய்த இறைச்சியை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தக்கூடாது. முதல் நாள் செய்த அசைவ உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடக் கூடாது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad