கத்திரி வெயில் நாளை தொடக்கம்
சென்னை : அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் நாளை தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும். அதிகபட்சமாக 113 டிகிரி வெயில் உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்திரி வெயிலின் 25 நாட்களும் தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும். டெல்லி, பாட்னா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் அதிகபட்சமாக வெயிலின் அளவு 109 டிகிரி முதல் 113 டிகிரி வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதற்கு அறிகுறியாக கடந்த இரண்டு நாட்களாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பதியில் நேற்று 113 டிகிரி வெயில் நிலவியது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் வெயில் 113 டிகிரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வெப்ப சலனம் ஏற்பட்டு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.